குரோமில் உள்ளது போல் பயர்பாக்ஸிலும் Auto Fill Forms

கூகுள் குரோம் தந்து புதிய பதிப்பான கூகுள் குரோம் ஆறில் சிறந்த வசதிகளை வாசகர்களுக்கு அளித்து இருந்தது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த Auto Fill Forms.
இந்த வசதியின் மூலம் நாம் இணையத்தில் படிவங்களை ஒவ்வொரு முறையும் நிரப்ப வேண்டியதில்லை ஒரே கிளிக்கில் நாம் படிவத்தை பூர்த்தி செய்து விடலாம்.
இதனால் குரோம் உபயோகிப்பவர்கள் எளிதாக ஆன்லைன் படிவங்களை எளிதாக நிரப்ப முடிந்தது.  இனி பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களும் இந்த வசதியை பெறலாம். ஆமாம் அதற்காக நீங்கள் ஒரே ஒரு Add-on மட்டும் உங்கள் பிரவுசரில் பொருத்தினால் போதும். 
இன்ஸ்டால் செய்யும் முறை: 
  • இந்த லிங்கில் சென்று இந்த Autofill Forms நீட்சியை தரவிறக்கி கொள்ளுங்கள். 
  • உங்கள் பிரவுசரில்  இன்ஸ்டால் ஆகியவுடன் உங்கள் பயர்பாக்சை Restart seidhu கொள்ளுங்கள். 
  • இந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் நிறுவியவுடன் உங்களுக்கு ஒரு பென்சில் போன்ற பட்டன் உங்கள் பிரவுசரில் தெரியும். 
  • அதை க்ளிக் செய்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ உண்டாகும்.
  • இதில் 25 தகவல்கள் காணப்படும். அந்த தகவல்களில் உங்களுக்கு தேவையான தகவலை நிரப்பி கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடவும்.
  • இதில் நீங்கள் வேண்டாம் என்று நினைக்கும் கட்டத்தை நீக்க Main என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
  • இதில் அந்தந்த தகவல்களுக்கு நேராக உள்ள டிக் குறியை எடுத்து விட்டால் Simple பகுதியில் அந்த கட்டங்களை நீக்கி விடலாம்.
  • மட்டும் இதில் உள்ள MOVE UP, MOVE DOWN பட்டங்கள் மூலம் நமக்கு தேவையான தகவலை மேலேயும் கீழேயும் நகர்த்தி கொள்ளலாம்.
  • இதில் நீங்கள் Interface என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான Shortcut key கொடுத்து கொள்ளலாம்.
  • இதில் உங்களுக்கு தேவையான Shortcut key கொடுத்து உங்கள் மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள். 
பயன் படுத்து முறை:
  • நீங்கள் ஏதேனும் தளத்தில் உறுப்பினர் ஆக நினைக்கின்றீர்கள் என வைத்து கொள்வோம்.
  • அவர்கள் உங்கள் விவரங்களை நிரப்புவதற்காக படிவங்கள் தருவார்கள் அதில் இனி நீங்கள் ஒவ்வொரு விவரமாக தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. 
  • உங்கள் மவுசில் Right Clik செய்யுங்கள். 
  • இதில் நீங்கள் Autofill Forms என்ற லிங்கை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடனே உங்கள் விவரங்கள் அந்தந்த கட்டங்களில் சரியாக பொருந்தியிருக்கும்.
  • அல்லது உங்கள் கீ போர்டில் ALT+J ஒருசேர அழுத்தினாலும் உங்களுடைய vivarangal பொருந்தி விடும். 
  • இந்த Add-on பற்றி மேலும் அறிந்து கொள்ள http://autofillforms.mozdev.org/
அவ்வளவு தான் பயர் பாக்ஸ் உபயோகிப்பவர்களும் இந்த வசதியை பெற்று அவர்களின் பொன்னான நேரம் செலவாவதை தடுக்கலாம்.
டுடே லொள்ளு 
Photobucket

ஏண்டா மொட்ட தலையா யார பார்த்து கண்ணடிக்கிற 

Comments