பிளாக்கரில் புது வசதி- விரும்பிய பகுதியை Feedburner மெயிலுக்கு அனுப்பலாம்

நாம் நம்முடைய பிளாக்கின் பதிவுகளை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள feedburner வழங்கும் Subscribe by Email என்ற வசதியின் மூலம் நம் வாசகர்களின் மெயிலுக்கு நம் பிளாக் அப்டேட்ஸ் போகும். இப்படி அனுப்பும் போது மற்றவர்களின் மெயிலுக்கு என்னுடைய முழுபதிவும் சென்று விட்டால் அவர்கள் என் தளத்திற்கு வரவே மாட்டார்கள் மெயிலிலேயே அனைத்தையும் படித்து விடுவார்கள் என்று நம்முடைய பதிவின் Site Feed-  Short- என்ற வசதியை இதுவரை பயன்படுத்தி வந்தோம்.
இதிலும் ஒரு பிரச்சினை உள்ளது Short என்பதை நாம் தேர்வு செய்து மெயில் போகும் போது Feedburner தானாகவே நம்முடைய பதிவில் முதலில் உள்ள பகுதியை அதன் விருப்பத்திற்கு வாசகர்களுக்கு அனுப்பும் இதில் நாம் நினைத்த பகுதியை வாசகர்களுக்கு அனுப்ப முடியாது. சுவாரஸ்யமான பகுதியை நம் வாசகர்களுக்கு அனுப்பினால் அவர்கள் நம் தளத்திற்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த குறையை போக்கவே பிளாக்கரில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.
  • உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Setting- Site feed  - செல்லுங்கள். சென்று அங்கு உள்ள Blog Posts Feed என்ற வசதியில் Until Jump Break என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.   
  • கீழே உள்ள SAVE SETTINGS என்பதை க்ளிக் செய்து விடவும். அவ்வளவு தான் இனி நீங்கள் பதிவு எழுதும் போது நீங்கள் சேர்க்கும் Jump Break வரை உங்களுடைய பதிவுகள் பற்றவர்களின் மெயிலுக்கு செல்லும்.
  • இதில் நான் காட்டியிருக்கும் கோட்டிற்கு மேலுள்ள பகுதிகள் மட்டும் தான் feedburner மூலம் வாசகர்களின் மெயிலுக்கு செல்லும். இதன் மூலம் நம் விரும்பிய பகுதியை மட்டும் Feedburner மெயிலுக்கு அனுப்பலாம்.
டுடே லொள்ளு 
முதல்ல எந்த பதிவர் வீட்டுக்கு போகலாம் 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments