கூகுள் ரீடரில் இருந்தே முழு பதிவையும் படிக்கலாம், கமென்ட் போடலாம்,ஓட்டும் போடலாம்

கூகுள் ரீடர் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. நாம் இணையத்தில் பல இடங்களில் உலாவுவும் பொது சில தளங்கள் நம்மை கவரும். அது போன்ற தளங்களை நாம் கூகுள் தொடர் ஏற்படுத்தி கொண்டால் அந்த தளங்களுக்கு செல்லாமல் அந்த தளங்களில் பதிவுகளை இங்கிருந்து காண முடியும். மற்றும் சில இடங்களில் கணினிகளில் மற்ற தளங்கள் திறக்காதவாறு தடை செய்து இருப்பார்கள். அந்த சமயத்தில் நாம் இந்த கூகுள் ரீடரில் பதிவுகளை படித்து கொள்ளலாம்.  அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது கூகுள் ரீடரில் நாம் இணைக்கும் தளங்களில் Feed முழுவதுமாக பகிர்ந்தால் மட்டுமே நம்மால் முழு பதிவையும் கூகுள் ரீடரில் படிக்க முடியும். ஒருவேளை அந்த தளங்களில் Feed குறைத்து வைக்க பட்டிருந்தால் நாம் அந்த பதிவை பற்றிய சிறிய முன்னோட்டத்தை மட்டுமே பார்க்க முடியும், முழு பதிவையும் படிக்க வேண்டுமென்றால் ReadMore லிங்கில் க்ளிக் செய்து அந்த தளங்களுக்கு  சென்றால் மட்டுமே காண முடியும்.  
  • அதற்காக கூகுள் தனது உலாவியான கூகுள் குரோம் பயன் படுத்துபவர்களுக்கு இந்த கூகுள் ரீடரில் முழு பதிவையும் படிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
  • இதற்க்கு முதலில் இதில் க்ளிக் செய்து Super Google Reader என்ற நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள்.
  • நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் இந்த நீட்சி உங்கள் உலவியில் இனைந்து கொள்ளும் இப்பொழுது கூகுள் ரீடரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • அங்கு Subscritions பகுதியில் உள்ள தளங்களில் நீங்கள் படிக்க விரும்புவதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு தேவையான பதிவை ஓபன் செய்யுங்கள் அது பாதி அளவே இருக்கும். இப்பொழுது மேலே ஒரு Super Settings என்ற புதிய பட்டன் வந்திருக்கும் அதை க்ளிக் செய்யவும்.
  •  அதில் உள்ள Full Entry Content என்பதை க்ளிக் செய்தால்andha பதிவிற்கு சொந்தமான தளமே கூகுள் ரீடரில் ஓபன் ஆகும்.
  • இனி அந்த முழு பதிவுகளையும் கூகுள் ரீடரிலேயே நாம் பார்த்து கொள்ளலாம். 
  • அப்படி ஓபன் செய்து கொண்டு ஒட்டு போடலாம், கமென்ட் போடலாம், ஏன் பதிவே போடலாம். 
  •  நாம் அந்த தளங்களில் என்னவெல்லாம் செய்யலாமோ அனைத்தையும் கூகுள் ரீடரில் இருந்தே கொள்ளலாம்.

  • இது போன்று Super settings ல் Readable Content என்பதை க்ளிக் செய்தால் நம் அந்த முழு தளம் ஓபன் ஆவதை தவிர்த்து அந்த முழு பதிவு மட்டுமே நமக்கு தெரியும் அதை பார்த்துகொள்ளலாம்.
டுடே லொள்ளு 
சமையல் முடிஞ்சதும் பிளாக்ல சமையல் குறிப்பு போடணும் என்ன பேரு வைக்கலாம்?
 "மனித மூளை மஞ்சூரியன்"  சாவுங்கடா.

ஒருநாளைக்கு உங்க பேரு வச்சதுக்கே இவ்ளோ கோவம் வருதே நண்டு பொறியல், நண்டு கூட்டு, நண்டு ரசம் இப்படி வித விதமா பேரு வைக்கிறீங்களே எங்களுக்கு எப்படி இருக்கும்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments