பிளாக்கரில் லேபில்(Label) பக்கத்தில் தெரியும் செய்தியை நீக்க

பிளாக்கரில் பதிவு எழுதும் நாம் அனைவரும் நம் பதிவுகளை பிளாக்கரில் உள்ள label வசதியின் மூலம் தனி தனி வகைகளாக பிரித்து இருப்போம். உதாரணமாக சினிமா என்றால் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை சேமிப்போம் தொழில் நுட்பம் என்றால் அது சம்பந்தமான பதிவுகளை சேமிப்போம் இப்படி நிறைய லேபிள்களை உருவாக்கி அதில் நம் பதிவுகளை தனித்தனி வகைகளாக பிரித்து சேமித்து இருப்போம். இதில் என்ன பிரச்சினை என்றால் நாமோ அல்லது நம் தளத்திற்கு வரும் வாசகர்களோ இந்த லேபிள்களை ஓபன் செய்தால் நம் பதிவுகளுக்கு மேல் ஒரு சிறிய கட்டத்தில் ஒரு செய்தி வரும். அது பார்ப்பதற்கும் அழகற்று இருக்கும். ஆகவே அதை எப்படி நம் பிளாக்கரில் வராமல் நீக்குவது என கீழே காண்போம்.

• இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
• DESIGN - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
• அங்கு சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும். (கீ போர்டில் CTRL+F கொடுத்து தேடுவதன் மூலம் சுலபமாக கண்டறியலாம்)
<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>
• மேலே உள்ள கோடிங்கை கண்டுபிடித்தவுடன் அந்த கோடிங்கை முழுவதுமாக நீக்கி விட்டு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த கோடிங் இருந்த இடத்தில பேஸ்ட் செய்யவும்.
<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>
• பழைய கோடிங்கை நீக்கி விட்டு புதிய கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி நீங்கள் செய்த மாற்றத்தினை சேமித்து கொள்ளுங்கள்.
• அவ்வளவு தான் இனி உங்கள் பிளாக்கை திறந்து அதில் உள்ள ஏதேனும் ஒரு லேபிளை க்ளிக் செய்து பாருங்கள் முன்பு வந்த அந்த சிறிய கட்ட செய்தி இப்பொழுது வராது.
டுடே லொள்ளு
அய்யோ காப்பாத்துங்க

Comments