கூகுள் பிளசில் வந்தாச்சு இலவச ஆன்லைன் விளையாட்டுக்கள் - Games on Google+

பேஸ்புக்கின் இந்த இமாலய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள். இந்த வசதி பேஸ்புக்கில் வந்து பல மில்லியன் வாசகர்களை கவர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிற கூகுளும் சும்மா இருக்குமா என்ன தன்னுடைய சமூக தளத்திலும் இலவச ஆன்லைன் விளையாட்டுக்களை அறிமுகபடுதியுள்ளது.
இனி ஆன்லைனில் விளையாட எங்கும் அலைய வேண்டியதில்லை நம் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே நாம் விளையாடலாம் கூகுள் பிளஸ் உதவியுடன்.
ஆனால் எப்பொழுதும் போல இந்த வசதிகளை அனைவருக்கும் தற்பொழுது வழங்கவில்லை. குறிப்பிட்ட அளவு இந்த வசதியை வழங்கியுள்ளது கூடிய விரைவில் அனைவருக்கும் வழங்க இருப்பதாக அவர்களின் பிளாக்கில் தெரிவித்து உள்ளனர்.

இந்த தளத்தில் ஒரே விளையாட்டை உங்கள் நண்பரோடு சேர்ந்து நீங்கள் விளையாடும் வசதியும், உங்களுடைய Top score மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும், உங்களுக்கு இந்த விளையாட்டு பகுதி தேவையில்லை என்றால் அதனை நீக்கி விடும் வசதியும் இதில் அறிமுகபடுத்தி உள்ளனர். 

உங்களுக்கு இந்த வசதி கிடைத்து விட்டதா என அறிய உங்கள் Stream பகுதிக்கு மேலே Games என்று ஒரு புதிய லிங்க் இருக்கும் அல்லது கூகுள் பிளசில் Home, Photos, Profile, Circles பட்டங்களுக்கு அருகில் புதிய பட்டன் ஒன்று வந்திருக்கும் அதில் கிளிக் செய்தாலும் Games பகுதிக்கு செல்லலாம்.


மேலும் நீங்கள் Developer ஆக இருந்தால் உங்களுடைய விளையாட்டை கூகுள் பிளசிற்கு அனுப்பலாம். அதன் விவரங்களுக்கு Google+ Developer blog இந்த லிங்கில் செல்லுங்கள்.

Comments