பேஸ்புக் போட்டோக்களுக்கு சுலபமாக விதவிதமான Effects கொடுக்க

பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் பலவிதமான போட்டோக்களை நாம் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த போட்டோக்களுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக போட்டோக்களுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன ஆனால் அந்த தளங்களில் நேரடியாக பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் பேஸ்புக்கில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து அந்த தளத்தில் அப்லோட் செய்து டிசைன் பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து போட்டோவை டவுன்லோட் செய்து பிறகு பேஸ்புக்கில் அப்லோட் செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக போட்டோக்களுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.


முதலில் கீழே இந்த Mess My Photo லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளம் திறந்தவுடன் அதில் உள்ள FB Select என்பதை கிளிக் செய்யவும்.
  • முதல் தடவை என்பதால் பேஸ்புக் permission கேட்கும் அதற்க்கு முதலில் வரும் விண்டோவில் Install என்றும் அடுத்து வரும் விண்டோவில் Allow என்பதையும் கொடுக்கவும்.
  • அடுத்த விண்டோவில் உங்களின் பேஸ்புக் கணக்கில் உள்ள போட்டோக்கள் வரும் அதில் எபெக்ட் கொடுக்க விரும்பும் போட்டோவை தேர்வு செய்து கொள்ளவும்.
  • நீங்கள் தேர்வு செய்த போட்டோவில் உங்களுக்கு விருப்பமான எபெக்ட் கொடுத்து அழகாக மாற்றி கொள்ளவும்.
  • இதில் சுமார் 10 விதமான எபெக்ட் உள்ளது. உங்களுக்கு விரும்பிய எபெக்ட் கொடுத்து மாற்றியவுடன் Apply கொடுத்து FB SAVE என்ற லிங்கை அழுத்தியவுடன் இந்த புதிய போட்டோ உங்கள் பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்படும்.
விருப்பமிருந்தால் அந்த புதிய போட்டோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம்.


Comments