ஓரிரு நாட்களில் அசத்தலான வசதிகளுடன் வருகிறது கூகுள் டிரைவ்

Cloud Storage பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம் நம்முடைய பைல்களை இணையத்தில் சேமித்து வைத்து விட்டால் போதும் உலகத்தில் எந்த மூலையில் இருந்து எந்த நேரத்திலும் கையாளும் வசதியை கொடுப்பது தான் கிளவுட் சேவைகள்.  பல நிறுவனங்கள் இந்த சேவையை கொடுத்தாலும் Dropbox எனப்படும் சேவையை பல லட்சகணக்கான பயனர்கள் உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். இப்பொழுது இந்த Cloud Storage சேவையில் இணைய ஜாம்பவானான கூகுளும் குதிக்கிறது. Google Drive என்ற புதிய சேவையை துவக்க இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக கூகுள் டிரைவ் பற்றி ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருந்தாலும் இப்பொழுது கிடைத்து இருக்கும் ஆதாரங்கள் இன்னும் ஓரிரு நாளில்(இந்த வாரத்திற்குள்)  கூகுள் டிரைவ் சேவையை வெளியிட இருப்பதை உறுதி படுத்துகிறது. 



முந்தைய பதிவில் கூகுள் டிரைவ் வசதி 5GB இலவச இட வசதியுடன் வர இருக்கிறது என்பதை பார்த்தோம். அதற்க்கு மேல் உங்களுக்கு இடவசதி வேண்டுமென்றால் வருடத்திற்கு 5$ செலுத்தினால் 20GB வரை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் ட்ரைவ் வசதியை பெற ஒரு ஜிமெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும். இந்த சேவையை விண்டோஸ், மேக், ஆன்ட்ராய்ட், ஐ-போன், ஐ-பேட் போன்ற இயங்கு தளங்களில் இருந்து பெற முடியும். 

TNW என்ற ஆங்கில தளம் கூகுள் டிரைவ் சேவையின் டிராப்ட் வசதியை பெற்று இருப்பதாக அறிவித்து உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் இந்த சேவை செவ்வாய் அல்லது புதன் அன்று அனைவருக்கும் வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளனர். 

மற்றொரு ஆங்கில தளமான TechcCrunch நிறுவனத்தினர் இன்னுமொரு ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு உள்ளனர். 



இந்த அனைத்து வதந்திகளுக்கும் விரைவில் விடை அளிக்க போகிறது கூகுள் நிறுவனம் என்பது மட்டும் உண்மை.

Comments